ஹோட்டலில் பெண் ஒருத்தி நுழைந்ததும், மெனு அட்டையை கொண்டு வந்து கொடுத்தார் பணியாளர்.
அதில் அவளுக்கு பிடித்த கோழி சாப்ஸ் இருந்தது. ஆனால் மறந்தாற்போல் ஏதோ ஒன்றை மெனு அட்டையில் டிக் செய்தாள். பணியாளரும் அதைக் கொண்டுவரவே, அவர் மீது எரிந்து விழுந்தாள். தான் கோழி சாப்ஸ் மட்டுமே கேட்டதாகக் அடம்பிடித்தாள் அந்தப்பெண். பணியாளரும் தான் தவறு செய்ததாக கூறி, மன்னிப்பு கேட்டு சாப்ஸ் கொண்டு வந்து வைத்தார்.
சாப்பிடும்போது தற்செயலாக மெனு அட்டையைப் பார்த்தவள், தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து கொண்டாள். உடனே உள்ளே இருக்கும் பணியாளரை அழைத்து, ''நான் செய்த தவறுக்காக ஏன் நீங்கள் மன்னிப்பு கேட்டீர்கள்'' எனக்கேட்டாள்.
''மேடம். நீங்கள் ஏதோவொரு டென்ஷனில் தவறுதலாக சொல்லியிருப்பீர்கள். அதை பெரிதுபடுத்த வேண்டாமே என எண்ணி மன்னிப்புக்கேட்டேன்'' என்றார்.
நம் அன்றாட வாழ்க்கையில் இதுபோல் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கும். சிலர் தெரியாமல் தவறு செய்துவிடுவார்கள். அதை பலர் பெரிதாக்கி அவர்கள் மீது எரிந்து விழுவார்கள். 'யாராவது தெரிந்தே தவறு செய்வார்களா...' என சிந்தித்தால் இவர்களுக்கு இப்படி செய்ய மனம் வராது