டிச.17, மார்கழி 2: ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் எல்லாம் வல்ல சித்தர் கோலம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை
டிச.18, மார்கழி 3: பவுர்ணமி, ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் ஆனந்த தாண்டவ காட்சி, வீரவநல்லுார் சிவபெருமான் வெள்ளை சாற்றியும், பச்சை சாற்றியும் காட்சியருளல், அவிநாசி சிவபெருமான் பவுர்ணமி பூஜை அபிேஷகம், 63 நாயன்மார்களுடன் குருபூஜை
டிச.19, மார்கழி 4: ஆருத்ரா அபிேஷகம், ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் பஞ்ச பிரகார உற்ஸவம், சிதம்பரம் நடராஜர் ராஜசபை ஆயிரம் கால் மண்டபம் எழுந்தருளல், அஹோபில மடம் 16வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
டிச.20, மார்கழி 5: ஆருத்ரா தரிசனம், ஆவுடையார்கோவில் சிவன் மாணிக்கவாசகருக்கு உபதேசித்த காட்சி, சிதம்பரம் நடராஜர் ஆனந்த தாண்டவம், குற்றாலம் குற்றாலநாதர் திரிகூட மண்டபத்தில் தாண்டவ தீபாராதனை, திருநெல்வேலி நெல்லையப்பர் தாமிரசபா நடனம், திருவாலங்காடு சிவன் ரத்தினசபா நடனம், உத்திரகோசமங்கை கூத்தபிரான் தரிசனம், சடைய நாயனார் குருபூஜை
டிச.21, மார்கழி 6: சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிபெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம், பத்ராசலம் ராமர் புறப்பாடு, கரிநாள்
டிச.22, மார்கழி 7: சங்கடஹர சதுர்த்தி, திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்
டிச.23, மார்கழி 8: திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ராமர் திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், பெருஞ்சேரி வாகீஸ்வரர் பவனி