அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆப்ரஹாம் லிங்கன் நின்றபோது, கிராமப்புறத்திற்கும் சென்று ஓட்டுக்கேட்பார். இப்படி ஒரு வயலுக்கு சென்றபோது, விவசாயி தானியங்களை அறுவடை செய்து கொண்டிருந்தார். அவரிடம், ''தாங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
''அப்படியே செய்கிறேன். நான் சாப்பிடப்போகிறேன். அதுவரை இந்த கதிர்களை அறுக்க முடியுமா'' எனக்கேட்டார் விவசாயி. அவரும் அரிவாளை வாங்கி கதிர்களை அறுக்கத் தொடங்கினார். சாப்பிட்டு வந்தவர், அறுக்கப்பட்டு அழகாக கட்டி வைக்கப்பட்டிருந்த கதிர்களை பார்த்தார். ஆனால் லிங்கனும், அரிவாளும் அங்கு இல்லை.
தேர்தலில் வெற்றி பெற்ற லிங்கன் விருந்து ஒன்றை நடத்தினார். அதில் கலந்து கொள்ள விவசாயியையும் அழைத்திருந்தார்.
அப்போது, ''நான் கதிர்களை நன்றாக அறுவடை செய்திருந்தேனா'' என ஆவலோடு கேட்டார்.
''நன்றாக இருந்தது. ஆனால் எனது அரிவாளை என்ன செய்தீர்கள்''
எனக்கேட்டார்.
''உங்கள் பண்ணையில் இருந்த குடிசையின் கூரையில் சொருகிவிட்டு வந்தேனே. நீங்கள் பார்க்கவில்லையா'' என்றார்.
லிங்கனின் கடமை உணர்வையும், கண்ணியத்தையும் எண்ணி வியப்படைந்தார்.