சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
டிசம்பர் 30,2021,13:14  IST

* திருப்பாவை ஜீயர் என போற்றப்படுபவர் ராமானுஜர்.
* ராமானுஜருக்கு நாராயண மந்திரத்தை உபதேசித்தவர் திருக்கோஷ்டியூர் நம்பிகள்.
* மகாவிஷ்ணு வழிபாட்டிற்குரிய ஆகம முறைகள் பாஞ்சராத்ரம், வைகானஸம்.
* வைகுண்டத்தில் எல்லையில் ஓடும் நதி விரஜா.
* வைகுண்டத்தின் சிறப்பை வர்ணிக்கும் நுால் ஸ்ரீவைகுண்ட கத்யம்.
* ராம சேவையில் தன் உயிர் துறந்த தியாகி ஜடாயு.
* பத்ரி நாராயணன் என்பதன் பொருள் இலந்தையடிப் பெருமாள்.
* அபிமான தலம் எனக் குறிப்பிடப்படும் தலம் ஆச்சாரியார்கள் வழிபட்ட தலம்
* நாலாயிர திவ்ய பிரபந்த பாடலைத் தொகுத்தவர் நாதமுனிகள்.
* திருஞானசம்பந்தரிடம் வேலினைப் பரிசாகப் பெற்றவர் திருமங்கையாழ்வார்.
* ஆளவந்தாருக்கு துாதுவளைக்கீரையை துாதாக அனுப்பியவர் மணக்கால்நம்பி.
* 'தாசமார்க்கம்' என்னும் அடிமை வழியில் சிவனை அடைந்தவர் திருநாவுக்கரசர்.
* 'தம்பிரான் தோழர்' என அழைக்கப்படும் சிவபக்தர் சுந்தரர்.
* பஞ்சாமிர்த வண்ணம் பாடி முருகனை குளிரச் செய்தவர் பாம்பன் சுவாமிகள்.
* திருத்தணி முருகனை கண்ணாடியில் தரிசித்து மகிழ்ந்தவர் வள்ளலார்.
* திருமாலின் சாரங்க வில்லின் அம்சமாக தோன்றியவர் திருமங்கையாழ்வார்.
* பெரிய புராணம் பாடி நாயன்மார்களை போற்றியவர் சேக்கிழார்.
* ஐந்தாம் வேதமான மகாபாரதத்தை இயற்றியவர் வேத வியாசர்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X