டிச.25 - நினைவு நாள்
* தர்ம பாதையில் செல். அது உன்னை காக்கும்.
* நல்லது செய்ய வேண்டும் என உறுதி எடு. அதில் துன்பத்தை சந்தித்தாலும் பின்வாங்காதே.
* அதர்மமான ஆசை மனதில் தோன்றும்போதே அதை களைந்துவிடு.
* சந்தேகப்படுபவன் மாலுமியில்லாத கப்பல் போல துன்பக் கடலில் தத்தளிப்பான்.
* எவ்வளவுதான் பணம், கல்வி இருந்தாலும் அடக்கம் என்பது வேண்டும்.
* உள்ளம் உருகி வழிபடு. கடவுள் நிச்சயம் அருள்புரிவார்.
* வாழ்வின் ஜீவநாடியான நீதியை காப்பது உன் கடமை.
* சிறிய செயல் செய்பவரைப் பார்த்து நீ சிரித்தால், கடவுள் உன்னை பார்த்து சிரிப்பார்.
* சுதந்திரமாக வாழ விரும்புகிறாயா... சிலவற்றை தியாகம் செய்.
* கவலைப்பட்டால் அது எந்த பிரச்னையையும் தீர்க்காது.
* நெற்பயிர் போல மனிதர்கள் வளர்ந்து முதிர்ந்து அறுபடுகிறார்கள்.
* கஷ்டத்தை அனுபவித்தால்தான் சுகத்தின் அருமையை உணர்ந்து கொள்ள முடியும்.
* சுதந்திரம் இல்லாத நாடு உயிர் இல்லாத உடலைப்போன்றது.
* பிறரிடம் அன்பு காட்டு. அதுவே அடிப்படையான தர்மம்.
* அறிவை வளர்த்துக்கெள்ள முயற்சி செய்.
நம்பிக்கை தருகிறார் ராஜாஜி