டிச.24, மார்கழி 9: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை, சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், திருத்தணி முருகப் பெருமான் கிளிவாகனம், கரிநாள்.
டிச.25, மார்கழி 10: திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார், திருமயம் ஆண்டாள் புறப்பாடு, குச்சனுார் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை.
டிச.26, மார்கழி 11: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், இயற்பகை நாயனார் குருபூஜை, கரிநாள்
டிச.27, மார்கழி 12 சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம்
டிச.28, மார்கழி 13: சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், அகோபில மடம் 4வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.
டிச.29, மார்கழி 14: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் புறப்பாடு, திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், மானக்கஞ்சாற நாயனார் குருபூஜை
டிச.30, மார்கழி 15: ஏகாதசி விரதம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளல், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, அகோபிலமடம் 40வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், திருப்பரங்குன்றம் முருகன், பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு.