பல ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி ரயில் நிலைய பணிக்காக வந்த கற்களில் ஒன்று அனுமனின் வடிவில் இருந்தது. அதை பக்தர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். ஒருநாள் அங்கு வந்த ஆர்ம்ஸ்பி என்னும் ஆங்கிலேய ரயில்வே அதிகாரி அந்தக் கல்லின் மீது கால் தடுக்கி விழுந்தார்.
கோபத்துடன் அதை அகற்ற உத்தரவிட்டார். அன்றிரவு அதிகாரியை நுாற்றுக்கணக்கான குரங்குகள் சூழ்ந்து துரத்துவது போல கனவு கண்டார். இதையடுத்து ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கோயில் கட்ட அனுமதியளித்தார். சிறியளவில் கட்டப்பட்ட இது பிற்காலத்தில் பெரிதாக வளர்ந்தது. கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில் எனப்படும் இது திருச்சி ரயில்நிலையம் அருகிலுள்ள ரயில்வே காலனியில் உள்ளது.