இந்தக்காலத்தில் பலரும் அதிகமாக விலை கொடுத்து ஆடை வாங்குகிறார்கள். கேட்டால், 'இந்த ஆடையை அணிந்தால் எப்படி இருக்கும் என்பதை பார்க்கத்தான் வாங்கினேன்' என்பார்கள்.
உதவி செய்ததை மற்றவர் முன் சொல்லிக் காட்டுபவர், ஆடம்பர நோக்கில் ஆடை உடுத்துபவர், பொய் சத்தியம் செய்தவர் ஆகியோரை மறுமை நாளில் இறைவன் பார்க்க விரும்புவதில்லை. அவர்களை துாய்மை மிக்க சொர்க்கத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டான். மாறாக வேதனைப்படும் விதத்தில் துன்புறுத்துவான். எனவே ஆடம்பரமாக ஆடை உடுத்தாதீர்கள்.