* புகழ் மிக்க அனுமன் சாலிசா பாடலைப் பாடியவர் துளசிதாதர்.
* அனுமன் சாலிசா என்பதன் பொருள் 'அனுமனின் புகழ்'.
* பஞ்சமுக ஆஞ்சநேயரின் கிழக்கு நோக்கிய முகம் வானர முகம்.
* அனுமனுக்கு சாஸ்திர ஞானம் அளித்த குருநாதர் சூரியபகவான்.
* பட்டாபிஷேகத்தில் அனுமனுக்கு ராமர் அளித்த பரிசு முத்துமாலை.
* அனுமனின் பெருமை பேசும் ராமாயணப் பகுதி சுந்தர காண்டம்.
* அனுமனுக்கு முதன்முதலில் வெற்றிலை மாலை சாத்தியவர் சீதை.
* அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்த திருமணத்தடை விலகும்.
* ராமரின் நினைவாக சீதை அனுமனுக்கு அளித்த ஆபரணம் சூடாமணி.
* வாயுதேவனுக்கும், அஞ்சனா தேவிக்கும் மகனாக மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அனுமன் பிறந்தார்.
* குழந்தைப் பருவத்தில் சூரியனை சிவந்த பழம் எனக் கருதி அனுமன் உண்ணச் சென்றார்.
* ராமாயணத்தில் அனுமனின் பெருமையை விளக்கும் பகுதி சுந்தரகாண்டம்.
* சதகண்டன் என்ற அரக்கனைக் கொன்றவர் பஞ்சமுக ஆஞ்சநேயர்.
* ராமன் வெற்றி பெற்றதை சீதையிடம் தெரிவிக்க மணலில் அனுமன் எழுதிய மந்திரம் 'ஸ்ரீராம ஜெயம்'
* ஸ்ரீராம ஜெயம் என்னும் மந்திரம் முதன் முதலில் எழுதப்பட்ட இடம் அசோகவனம்
* ராமசேவை முடிந்ததும் அனுமன் கந்தமாதனம் என்னும் இடத்திற்கு சென்று தவத்தில் ஈடுபட்டார்.
* பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்று பல பெயர்கள் அனுமனுக்கு உண்டு.
* ராமாயணத்தில் இடம்பெறும் அனுமனும், விபீஷணனும் சிரஞ்சீவி என்னும் அழியாவரம் பெற்றவர்கள்.
* மகாபாரதத்தில் பார்த்தசாரதியான கிருஷ்ணர் செலுத்திய தேரின் கொடியில் அனுமன் இடம் பெற்றிருந்தார்.
* அனுமன் ஜெயந்தியன்று அனுமன் சாலிசா, சுந்தரகாண்டம் படிப்பது, ஸ்ரீராமஜெயம் ஜபிப்பது சிறப்பு.