* புகழோடு வாழ விரும்புகிறாயா... விவசாயம் செய்.
* எவ்வளவுதான் உன்னிடம் பணம் இருந்தாலும் வரவு அறிந்து செலவு செய்.
* உற்சாகமாக முயற்சியில் ஈடுபடு. அதுவே உன்னை முன்னேற்றும்.
* பிறருக்கு நீ என்ன செய்கிறாயோ அதுவே உன்னிடம் வரும்.
* சிறந்த உணவாக இருந்தாலும் நேரமறிந்து சாப்பிடு.
* தாய்ப்பாலை குடிக்கும் குழந்தை பலம் பெறும்.
* நிதானமாகச் செய்யும் செயல்கள் நிச்சயம் வெற்றி பெறும்.
* நல்லவர்களுடன் பழகு. எவ்வித பிரச்னையும் உன்னை அணுகாது.
* முழு மனதுடன் செய்யும் விரதமே பலன்தரும்.
* கடல் கடந்தாவது பொருளை தேடு.
* தெளிந்த நீரைப்போல மனம் இருக்க கோபத்தை கட்டுப்படுத்து.
* பாலைக் காய்ச்சினாலும் சுவை குறையாது. அதுபோல் நல்லவர்கள் வறுமையிலும் நேர்மையாக இருப்பர்.
* தீமைக்கும், துன்பத்திற்கும் காரணம் சோம்பல்.
வழிகாட்டுகிறார் அவ்வையார்