அமெரிக்காவின் 28 வது ஜனாதிபதியாக இருந்தவர் உட்ரோ வில்சன். இவர் பதவியில் இருந்தபோது நடந்த ஒரு போரில் பல அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். நியூயார்க் நகரில் அவர்களது இறுதிச் சடங்கை விரிவாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொள்ள உட்ரோ விரும்பினார். அந்த சமயத்தில் அவரைக்கொல்ல எதிரிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக ஒரு ரகசிய தவகல் வந்தது. இருந்தாலும் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார். இதை அறிந்த நண்பர் ஒருவர், ''ஒரு நல்ல அதிபரை அமெரிக்க இழந்து விடக்கூடாது'' என அவரிடம் சொன்னார்.
''என்னைத் தடுக்காதீர்கள். ஒரு கோழை அமெரிக்க அதிபராக இருக்க விரும்பவில்லை. அதுமட்டுமில்லாமல் தாய்நாட்டிற்காக ரத்தம் சிந்தியவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்'' என சொல்லி இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.
அங்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. உட்ரோவின் நாட்டுப்பற்று, மனஉறுதியை அனைவரும் பாராட்டினார்.