ரிப்லி என்பவர் 'நம்பினால் நம்புங்கள்' என்னும் புத்தகத்தில், இரும்பை குறித்து எழுதியுள்ளார்.
* இரும்பானது குதிரையின் லாடமாக மாறும்போது அதன் மதிப்பு 50 டாலர்.
* தையல் எந்திரத்தின் ஊசியாக வடிவமைக்கும்போது அதன் மதிப்பு 5000 டாலர்.
* ஸ்விஸ் வாட்சின் மெல்லிய ஸ்பிரிங்காக வலு உள்ளதாக மாற்றப்படும்போது அதன் மதிப்பு 5 லட்சம் டாலர்.
இரும்பு பதனிடப்படாமல் இருந்தால் அதன் மதிப்பு குறைவு. வடிவமைப்புக்கு ஏற்பவே அதன் மதிப்பு மாறுபடுகிறது.
அதுபோல் ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை ஒளிந்துள்ளது. சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். ஆனால் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியமே உள்ளது.