டிச.31, மார்கழி 16: பிரதோஷம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், திருவிடைமருதுார் பிரகத்குஜாம்பிகை புறப்பாடு, சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்
ஜன.1, மார்கழி 17: மாத சிவராத்திரி, மதுரை செல்லத்தம்மன் சப்பரத்தில் பவனி, நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் ராஜ அலங்காரம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜர் திருமஞ்சனம், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை, தொண்டரடிப்பொடியாழ்வார் திருநட்சத்திரம்
ஜன.2, மார்கழி 18: அனுமன் ஜெயந்தி, மதுரை கூடலழகர் கோயிலில் பரத்துவ நிர்ணயம் செய்தல், நாமக்கல், சுசீந்திரம் அனுமன் அபிேஷகம், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு, திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் நடையழகுசேவை
ஜன.3, மார்கழி 19: விஷ்ணு கோயில்களில் பகல்பத்து உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீவில்லிபுத்துார் திருப்பல்லாண்டு தொடக்கம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம், மதுரை செல்லத்தம்மன் பட்டாபிஷேகம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், சாக்கியநாயனார் குருபூஜை
ஜன.4, மார்கழி 20: திருவோண விரதம், சந்திர தரிசனம், ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் பகல்பத்து உற்ஸவம், கீழ்த்திருப்பதி கல்வெங்கடேசர் திருமஞ்சனம், சாத்துார் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
ஜன.5, மார்கழி 21: மதுரை கூடலழகர், திருமோகூர் காளமேகப் பெருமாள் பகல்பத்து உற்ஸவம், ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் வேணுகாண கண்ணன் திருக்கோலம், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருமொழி திருநாள் தொடக்கம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காளிங்க நர்த்தனம், மதுரை செல்லத்தம்மன் பூப்பல்லக்கு.
ஜன.6, மார்கழி 22: சதுர்த்தி விரதம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ஆண்டாள் திருக்கோலம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரங்கமன்னார் பகல்பத்து உற்ஸவம், மிலட்டூர் விநாயகர் புறப்பாடு, தேரெழுந்துார் திருஞான சம்பந்தர் பவனி, பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு.