சாதனை படைக்கும் ஹிந்து மதம்
ஜனவரி 07,2022,19:18  IST

* பல சோதனைகளை சந்தித்தாலும் சாதனை படைக்கும் விதத்தில் ஹிந்து மதம் தழைத்திருப்பதற்கு காரணம் கோயில்களே.
* சிறிதாக செயல் ஒன்றில் ஈடுபட்டாலும் அக்கறையுடன் செயல்படு.
* 'பிறரை விட நமக்கு அதிகம் கிடைக்கவேண்டும்' என எண்ணுவதே போட்டி மனப்பான்மைக்கு காரணம்.
* குழந்தையின் மனதில் பக்தி என்ற விதையை விதைத்துவிட்டால், அது என்றாவது ஒரு நாள் முளைத்து விடும்.
* இம்மைக்கும், மறுமைக்கும் தேவையான செயல்களை செய்.
* 'மனசாட்சியின்படி நடந்து கொள்' என்று சாஸ்திரமும் அறிவுறுத்துகிறது.
* தர்மமே உன்னுடைய வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.
* ஒவ்வொருவர் உள்ளத்திலும் கடவுள் குடிகொண்டிருக்கிறார்.
* எப்போதும் கடவுள் நாமத்தை சொல். நிம்மதியாக வாழலாம்.
* பிறருக்கு அறிவுரை கூறும்முன் உனக்கு அந்த தகுதி உள்ளதா என யோசி.
* அறிவு, அழகு, செல்வம் இவற்றில் எது உன்னிடம் இருந்தாலும், அதை எண்ணி கர்வப்படாதே.
* எந்தவொரு இக்கட்டான சூழலில் இருந்தாலும், நீ செய்த தர்மம் உன்னை காப்பாற்றும்.
* எதுவும் உன் கையில் இல்லை. கடவுளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடு.
* கட்டுப்பாடற்று பேசினால் பிரச்னை ஏற்படும்.

சொல்கிறார் காஞ்சி மஹாபெரியவர்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X