ஜன.12 - பிறந்த நாள்
* சொல், செயல், சிந்தனை ஒன்றாக இருந்தால் உலகையே ஆளப்பிறந்தவனாக நீ மாறலாம்.
* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
* மனிதனை விட உயர்ந்த பிறவி உலகத்தில் வேறு இல்லை.
* லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளை செய்வான்.
* உற்சாகமுடன் இருப்பதுதான் ஆன்மிக வாழ்க்கைக்கான முதல் அறிகுறி.
* நல்ல மனதுடன் இரு. நீ ஒருவனே அனைவருக்கும் சமமாவாய்.
* 'எல்லோரும் நன்றாக வாழ வேண்டும்' என நினைத்தாலே போதும். நீ முன்னேறிவிடுவாய்.
* ஓய்வு இல்லாமல் வேலை செய்.
* அன்பின் மூலம் ஒரு செயலை செய்தால் அது மகிழ்ச்சியை கொடுக்கும்.
* அறிவுச்சுரங்கத்தை திறப்பதற்கான சாவி மன ஒருமைப்பாடு.
* ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள். அதையே வாழ்க்கையாக்கு.
* தன்னம்பிக்கை, தெய்வ நம்பிக்கை இதுவே வெற்றிக்கான ரகசியம்.
* எந்தளவு வாழ்க்கையில் உயர்கிறாயோ, அந்த அளவு சோதனைகளை நீ கடந்தாக வேண்டும்.
* எல்லாவற்றையும் கேள். எது உனக்கு சரியெனப்படுகிறதோ அதை செய்.
என்கிறார் விவேகானந்தர்