அமெரிக்காவில் உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன், ஒரு பகுதியில் முகாமிட்டிருந்த ராணுவத்தினரை வேறொரு இடம் செல்ல உத்தரவிட்டார். அப்போது ராணுவ செயலாளராக எட்வின் ஸ்டான்டன் என்பவர் இருந்தார். அவர் லிங்கனின் உத்தரவுக்கு மறுப்பு தெரிவித்தார். இவ்விஷயம் லிங்கனுக்கு தெரியவந்தது. உடனே அவரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்.
''நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். எனது முட்டாள்தனத்தை சரிசெய்து கொள்கிறேன்'' என தனது உத்தரவை திரும்ப பெற்றார் லிங்கன்.
தன் மீது கோபம் கொள்ளாமல், விவேகமுடன் செயல்பட்ட லிங்கனை கண்டு ஆச்சர்யப்பட்டார் எட்வின் ஸ்டான்டன். இவரைப்போல நாமும் விமர்சனத்தை ஏற்கும் பண்பை வளர்த்துக் கொள்ளலாமே!