சொல்லாதே யாரும் கேட்டால்...
ஜனவரி 26,2022,17:11  IST

* ஒரு செயலை செய்து முடிக்கும் வரை யார் கேட்டாலும் அதைப்பற்றி சொல்லாதே.
* உன்னுடைய பேச்சை பொறுத்தே உன் எதிர்காலம் உள்ளது.
* உனக்கு உதவி செய்தவர்களை ஒருபோதும் மறக்காதே.
* பெரியவர்களின் அறிவுரையை கேட்டால் நல்ல பாதையில் பயணிக்கலாம்.
* மகான்களின் சந்திப்பு கிடைத்துவிட்டால் உன் தலைமுறையே ஒளிரும்.
* 'தினமும் நமக்கு சாப்பிட உணவு கிடைக்கிறதே' என திருப்தியாக இரு.
* மனதை அமைதியாக வைத்துக்கொள். மகிழ்ச்சி எங்கே உள்ளது என தெரியும்.
* முட்டாளாக இருக்காதே. எல்லா விஷயத்தையும் அறிந்துகொள்.
* பிறர் வீட்டிற்கு சென்று வாழ்வதுதான் நமக்கு மிகவும் கஷ்டமான விஷயம்.
* குழந்தைகளுக்காக சொத்து சேர்ப்பதை விட அவர்களுக்கு நல்லதை சொல்லிக்கொடு.
* தினமும் கடவுளை வணங்கு. உனது பாவம் குறையும்.
* கடவுளின் பார்வை உன்மீது விழுந்தால் மட்டுமே முயற்சியில் வெற்றி பெறுவாய்.
* எப்போதும் மகிழ்ச்சியாக இரு. கடினமான பணி கூட எளிதாகிவிடும்.

சொல்கிறார் சாணக்கியர்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X