குழந்தை வரம் தரும் குலசேகரநாதர்
ஜனவரி 26,2022,17:19  IST

திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை பிறக்கவில்லையே என ஏங்குகிறீர்களா...கவலை வேண்டாம். திருநெல்வேலி மாவட்டம் காருகுறிச்சி குலசேகரநாத சுவாமியை தரிசியுங்கள். 6ம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்தவர் பூதல வீர உதய மாரத்தாண்டன். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த இவர், குலம் தழைக்க வாரிசு இல்லையே என வருந்தினார்.
கார்த்திகை சோம வார விரதம் இருந்து குலசேகரநாதரை வழிபட்டு வந்தார். மனைவியோடு சேர்ந்த மன்னருக்கு சிவனருளால் ஆண் குழந்தை பிறந்தது. வம்சத்தை விளங்கச் செய்த குலசேகரநாத சுவாமிக்கு இதனால் 'வம்ச விருத்தீஸ்வரர்' என்ற பெயரும் உண்டானது.
கிழக்கு நோக்கி குலசேகரநாதரும், தெற்கு நோக்கி சிவகாமி அம்மனும் அருள்புரிகின்றனர். அம்மனின் வலது கை மலரைத் தாங்கியும், இடது கையை தொங்கவிட்ட நிலையிலும் உள்ளது.
களத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கி நல்ல மணவாழ்க்கை அமையும். குழந்தையில்லாதவர்கள் தங்களின் பெயர், நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்ய வீட்டில் மழலைக்குரல் ஒலிக்கும். கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்த தம்பதியர் வேண்டினால் பிரச்னை தீரும்.

எப்படி செல்வது: சேரன்மகாதேவி வழியாக திருநெல்வேலி - பாபநாசம் செல்லும் சாலையில் 26 கி.மீ., துாரத்தில் காருகுறிச்சி
விசேஷ நாள்: பிரதோஷம், கார்த்திகை சோம வாரம், மகாசிவராத்திரி
நேரம்: காலை 7:00 - 9:00 மணி; மாலை 5:00 - 7:30 மணி
தொடர்புக்கு: 78250 62168
அருகிலுள்ள தலம்: நெல்லையப்பர் கோயில் 21 கி.மீ.,
நேரம் : அதிகாலை 5:30 - 12:30 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0462 - 233 9910

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X