ஜான் என்பவர் புத்தகக்கடை நடத்தி வந்தார். பணியாளரிடம் விற்பனையை பார்க்க சொல்லி விட்டு சாப்பிட சென்றார். அப்போது அங்கு வந்தவர், நீண்ட நேரமாக தேடி ஒரு புத்தகத்தை எடுத்தார்.
'ஏதேனும் தள்ளுபடி உண்டா' என கேட்டதற்கு, 'புத்தகத்தின் அடக்கவிலையில் இருந்து பத்து சதவீதம் தள்ளுபடி உண்டு' என்றார் பணியாளர்.
'இருபது சதவீதம் தள்ளுபடி தர முடியுமா' எனக்கேட்க, அவர் 'முடியாது' என மறுத்தார்.
அப்போது ஜான் அங்கு வர அவரிடம், மீண்டும் இதே கோரிக்கையை வைத்தார் வாடிக்கையாளர்.
''சார் உங்களுக்கு தள்ளுபடியே கிடையாது'' என ஜான் சொல்ல அதிர்ச்சியானர்.
''என்னங்க.. முதலில் தள்ளுபடி உண்டு என்றீர்கள். இப்போது கிடையாது என்கிறீர்களே'' என்று கோபப்பட்டார்.
''நேரத்தை வீணாக்கியதற்கு தள்ளுபடி ஒரு கேடா' என்றார்.
வந்தவரோ இந்த புத்தகம் எங்கும் கிடைக்காததால் தலையை தொங்கவிட்டபடியே விலைக்கு வாங்கிச் சென்றார்.
நேரத்தை மதிக்காதவருக்கு இதுதான் தண்டனை. நேரத்தை மதியுங்கள். மதிப்பு உயரும்.