வாழ்க்கை எனும் பூஞ்சோலை
மார்ச் 25,2022,11:31  IST

இன்று வாழ்க்கையையே பெரும் சுமையாக பலரும் கருதுகிறார்கள். இவர்கள் எதை செய்தாலும் சலித்து கொள்வார்கள். இவர்களுடன் நீங்கள் பழகினாலே போதும், எதிர்மறை எண்ணம் உங்கள் மனதிலும் குடிகொண்டுவிடும். இதற்காக நாம் இருக்கும் இடங்களில் எல்லாம் நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் இருப்பார்களா... என்றால் அதுவும் கேள்விதான். சரி இதிலிருந்து தப்ப என்னதான் வழி என்று யோசிக்கிறீர்களா.. நேர்மறை எண்ணங்களால் உங்களை மனதை நிரப்புவதுதான் இதற்கான தீர்வு.
உதாரணமாக கிழக்கு திசையை நோக்கி செல்ல செல்ல மேற்கு திசையை விட்டு நாம் விலகிவிடுவோம். இதற்காக தனியாக எந்தவொரு முயற்சியும் செய்ய வேண்டாம். கிழக்கு நோக்கி செல்வதே மேற்கிலிருந்து விலகுவதாக ஆகிவிடுகிறது.
அதுபோல்தான் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை சந்தித்தாலும், நமது நேர்மறை எண்ணத்தால் அவர்களையும் மாற்றிவிடலாம். இதை நடைமுறைப்படுத்தி பாருங்கள். வறண்ட பாலைவனமாக இருக்கும் உங்களது வாழ்க்கை, பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையாக மாறிவிடும்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X