எர்ணாகுளத்தில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் உள்ள காலடியில் ஆதிசங்கரர் அவதரித்தார். இங்குள்ள திருக்காலடியப்பன் (கிருஷ்ணன்) கோயிலில் மே 1 - 6 வரை நடக்கும் யாகத்தில் லட்சுமி யந்திரம் வைத்து 10,008 கனகதாரா ஸ்தோத்திரத்தை 32 நம்பூதிரிகள் ஜபம் செய்வர்.
மே 3 அட்சய திரிதியை அன்று காலை 9:00 மணிக்கு தங்க, வெள்ளி நெல்லிக்கனிகளால் மகாலட்சுமி, விஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்யப்படும். அபிஷேக தங்க, வெள்ளி நெல்லிக்கனிகளை விற்பனை செய்கின்றனர்.
தொடர்புக்கு: 93888 62321