* எந்தவொரு பொருளையோ, பணத்தையோ வலது கையினால் கொடுத்து வாங்கினால் அது நாளுக்கு நாள் பெருகும்.
* சம்பளம் வாங்கியவுடன் பூச்செடி, பால், அரிசி, பூ, உப்பு போன்ற வளரும், பொங்கும், பெருகும் பொருட்களை முதலில் வாங்குங்கள்.
* கிரகண நாள், அதற்கு முன்பு உள்ள மூன்று நாட்கள், பின்புள்ள மூன்று நாட்கள் ஆகிய ஏழு நாட்களிலும் சுபநிகழ்ச்சி நடத்தக்கூடாது.
* சனிக்கிழமை தோறும் கோயிலுக்கு செல்வது சிறப்பு.
* கோயில் கோபுர நிழலை மிதிப்பது பாவம்.
* பசுக்கள் கூட்டமாக இருந்தாலும் கன்று அதில் தன் தாயை கண்டு பிடித்துவிடும். அதுபோல் ஒருவரது வினையும் அவரை தேடிச் சென்று விடும்.
* வழிபாட்டிற்கு மலரும், நீரும் முக்கியமானது. மலர் - பூ, நீர் - ஜலம். இவை இரண்டும் (பூ+ஜலம்) இணைந்து பூஜை என்றானது.
* கனவுகளுக்கு அதிபதி விநாயகர். அவரை திங்கள்தோறும் வணங்கி வந்தால் கெட்ட கனவுகள் வராது.
* திருமணம் நிச்சயமான நாளிலிருந்து ஐந்து பவுர்ணமிக்குள் திருமணத்தை முடிப்பது சிறப்பு.
* ஓராண்டு காலம் வீட்டை திறக்காமல் இருக்கக்கூடாது.
* வடை, அப்பளம், பழங்களை கையால் பரிமாறலாம். காய்கறிகள், அன்னம் கரண்டியால் பரிமாற வேண்டும்.
* அதிகாலையில் காகம் மிகவும் பசியோடு இருக்கும். அப்போது அதற்கு உணவு கொடுப்பவரின் பாவங்கள் தீரும்.
* புத்தகங்களை திருடுபவன் அடுத்த பிறவியில் பார்வையற்றவனாக பிறக்க வாய்ப்பு உள்ளது.