இந்த வாரம் என்ன
மே 08,2022,16:49  IST

ஏப்.29, சித்திரை 16: முகூர்த்த நாள், மாதசிவராத்திரி, திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தேர், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, திருச்செங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் யானை வாகனம், வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, செம்பொனார் கோவில் ஸ்வர்ணபுரீஸ்வரர் யானை வாகனம், சென்னை சென்னகேசவப்பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிபெருமாள் விடையாற்று உற்ஸவம், திருவிடை மருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.

ஏப்.30, சித்திரை 17: அமாவாசை, திருச்செங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் ரிஷப வாகனம், வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு, செம்பொனார் கோவில் ஸ்வர்ணபுரீஸ்வரர் வீதியுலா, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், சென்ன கேசவப்பெருமாள் விடையாற்று உற்ஸவம், திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சப்தாவர்ணம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி தீர்த்தவாரி, திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

மே 1, சித்திரை 18: திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி, வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் பிட்சாண்ட உற்ஸவம், அமுது படையல் விழா, திருப்போரூர் முருகன் பாலாபிேஷகம், சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை.

மே 2, சித்திரை 19: கார்த்திகை விரதம், சந்திர தரிசனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம், சுவாமிமலை, விராலிமலை முருகப்பெருமான் புறப்பாடு, திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் புஷ்பக விமானத்தில் பவனி, வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு, உய்யக்கொண்டான் திருநட்சத்திரம்.

மே 3, சித்திரை 20: பலராம ஜெயந்தி, அட்சய திரிதியை, திரேதாயுகாதி, கும்பகோணம் பெரியகடைத் தெருவில் 12 கருடசேவை, திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் குதிரை வாகனம், மன்னார்குடி ராமகோபால சுவாமி பவனி, திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் உற்ஸவம் ஆரம்பம், கீழ்த்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், மங்கையர்க்கரசி நாயனார் குருபூஜை.

மே 4, சித்திரை 21: முகூர்த்த நாள், சதுர்த்தி விரதம், வார்த்தா கவுரி விரதம், அக்னி நட்சத்திரம் ஆரம்பம், ஆறுமுக மங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் உற்ஸவம் ஆரம்பம், துாத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் பூங்கோவில் சப்பரத்தில் பவனி, திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் தேர், தேரெழுந்துார் ஞானசம்பந்தர் பவனி, வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிபெருமாள் விடையாற்று உற்ஸவம், இன்று செடி, கொடிகள் வைக்க நல்ல நாள்.

மே 5, சித்திரை 22: லாவண்ய கவுரி விரதம், திருச்சி, சங்கரன்கோவில், இலஞ்சி, திருப்பனந்தாள், திருத்தணி, திருவையாறு கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம்,ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி புஷ்பப் பல்லக்கு, எம்பெருமானார் திருநட்சத்திரம்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X