நல்லது நடக்க... 48 நாள் சொல்லுங்க!
மே 13,2022,14:08  IST

அகோபில மடத்தின் 44வது பட்டம் அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் இயற்றப்பட்டது நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம். இதை தினமும் சொன்னால் விருப்பம் நிறைவேறும். அப்போது பிரசாதமாக காய்ச்சிய பால் அல்லது வெல்லம், எலுமிச்சை கலந்த பானகம் இருக்க வேண்டும். கைமேல் பலன் பெற தொடர்ந்து 48 நாள் சொல்ல வேண்டும்.
மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
பிராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: திரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!
இதை சொல்ல முடியாதவர்கள் கீழ்க்கண்ட வாக்கியங்களைச் சொல்லுங்கள்.
நரசிம்மனே தாய்! நரசிம்மனே தந்தை! சகோதரன், தோழனாக இருப்பவனும் அவனே. அறிவும், செல்வமாகத் திகழ்பவனும் அவன் தான். நம் எஜமானனாகவும், எல்லாமுமாகவும் அவனே இருக்கிறான். பூலோகம், விண்ணுலகத்தை ஆள்பவன் நரசிம்மனே. எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அவனே இருக்கிறான். நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் யாருமில்லை. அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X