குழந்தைகள் என்றவுடன் நம் எல்லோரது நினைவிற்குள் வருவது அவர்களின் புன்னகைதான். அதற்கு காரணம் அந்த மழலையின் புன்னகையில் கபடம் இல்லை. ஆனால் பலரும் அவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என சொல்லித்தருவதில்லை.
இதனால் குழந்தைகள் வளர வளர கெட்ட குணங்களும் அதைவிட வேகமாக வளர்கிறது.
உங்களுடைய அனுபவங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்க்கை என்றால் இன்பமும் இருக்கும், துன்பமும் இருக்கும் என்பதை கற்றுக்கொடுங்கள்.