நாம் எல்லோரும் அமைதியை தேடிதான் அலைகிறோம். அது எங்கே கிடைக்கும்.. யார் அதை நமக்கு தருவார்... என்பது பலரது கேள்வியாக உள்ளது. அமைதிக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம். அது இருந்தால்தான் வாழ்க்கை நன்றாக போகுமா.. என சிலரும் விவாதம் செய்கின்றனர். உண்மையில் அமைதி நமக்கு தேவையா.. இல்லையா.. என்பதை பார்ப்போம். நாம் சீராக இயங்குவதற்கு மனம்தான் பலவகைகளில் உதவுகிறது. எப்படி என்று கேட்கிறீர்களா.. எப்போதும் படபடத்துக்கொண்டிருக்கும் மனதால் எதையும் செய்ய முடியாது. எதைத்தொட்டாலும் சந்தேகம். எதுவாக இருந்தாலும் பிரச்னை. இதே மனம் அமைதியாக இருக்கட்டும். மூளையானது வேகமாக வேலை செய்யும். கடினமான வேலைகளை கூட எளிதாக முடித்து விடலாம். சரி இதை எப்படி பெறலாம். ஒன்றும் இல்லை..
எந்தவித யோசனையும் இல்லாமல் இருங்கள். அதுதானாக கிடைத்துவிடும். அமைதியான மனதில்தான் நல்ல சிந்தனைகளும் ஓடும்