* சரஸ்வதி மீது குமரகுருபரர் இயற்றிய சகலகலா வல்லி மாலை, விநாயகர் மீது கச்சியப்பமுனிவர் இயற்றிய காரியசித்திமாலை போன்றவற்றை குழந்தைகள் தினந்தோறும் பாடினால் கல்வியில் நன்கு தேர்ச்சி பெறுவார்கள்.
* பாம்பன் சுவாமிகளுக்கு பொய் சொல்பவரைக்கண்டாலே பிடிக்காது.
* வைகாசி மாதம் முதல் தேதியில் கங்கையில் நீராடினால் ஏழு ஜென்ம பாவங்கள் தீரும்.
* நாகை மாவட்டம் ஆச்சாளபுரத்தில் ஒரே நாளில் முக்தி அடைந்த நாயன்மார்கள் திருஞான சம்பந்தர், முருகநாயனார், திருநீலநக்கர், திருநீல கண்ட யாழ்பாணர்.
* வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று சிவபெருமானை எண்ணி விரதம்இருக்க வேண்டும். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதனையே குடிக்க வேண்டும். அதன் பலனாக செய்த பாவம் அனைத்தும் போகும்.
* வைகாசி மாத தேய்பிறை (மே 26) ஏகாதசியன்று விரதம் இருந்து கல்வி கற்பவர்களுக்கு உதவி செய்தால் எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து நம்மை விரதபலன் காப்பாற்றும்.
* பன்னிரெண்டு வைகாசி மாத வளர்பிறை (ஜூன் 10) ஏகாதசியன்று விரதம் இருந்தால் ஆசைகள் ஈடேறும். முக்தி கிடைக்கும்.
* தென்காசி மாவட்டம் ஆய்குடி முருகன் கோயிலில் கொடுக்கப்படும் படிப்பாயசம் சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும்.
* திருத்தணியில் உள்ள குமார தீர்த்தத்தில் வைகாசி விசாகத்தன்று நீராடி முடிவில் முருகப்பெருமானை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும்.
* வடலுார் ராமலிங்க சுவாமிகள் சத்திய தரும சாலையை வைகாசி விசாக நன்னாளில் தான் நிறுவினார்.