இந்த வாரம் என்ன
மே 13,2022,14:21  IST

மே 13, சித்திரை 30 : சுபமுகூர்த்தம், பிரதோஷம், திருச்சி தாயுமானவர், கடையம், சங்கரன்கோவில் திருப்பனந்தாள், திருவையாறு, இலஞ்சி, ஆறுமுகமங்கலம், துாத்துக்குடி, திருக்கடவூர் கோயில்களில் தேர், திருவள்ளூர் வீரராகவர் காலையில் தொட்டித் திருமஞ்சனம், குதிரை வாகனத்தில் வீதியுலா. உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி திருக்கல்யாணம், சுவாமி யானை வாகனம், அம்மன் பூப்பல்லக்கு, காஞ்சிபுரம் வரதராஜர் சிம்ம வாகனம். உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை.

மே 14, சித்திரை 31: காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி கேடயத்தில் பவனி, வீரபாண்டி கவுமாரியம்மன் தேர், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் காலை அன்னவாகனம், இரவு சூரிய பிரபையில் பவனி. உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி தேர், திருச்சி தாயுமானவர் ரிஷப சேவை. இலஞ்சி சிவபெருமான் வெள்ளி மயில் வாகனம். திருவையாறு சிவபெருமான் ஸப்த ஸ்தல பிரதட்சணம், அஹோபிலமடம் 29வது பட்டம் அழகியசிங்கர், மதுரகவியாழ்வார் திருநட்சத்திரம், இசைஞானியார் குருபூஜை.

மே 15, வைகாசி 1: சுபமுகூர்த்தம், பவுர்ணமி. விஷ்ணுபதி புண்ணிய காலம். அர்த்தநாரீஸ்வரர் விரதம், சம்பத்கவுரி விரதம், புத்தபூர்ணிமா. திருச்சி தாயுமானவர் விடையாற்று உற்ஸவம். குதிரை வாகனத்தில் புறப்பாடு. காரைக்குடி கொப்புடையநாயகி வெள்ளி ரிஷப ஸேவை. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் சப்தாவர்ணம். திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கண்ணாடி பல்லக்கில் பவனி. சோள சிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் காலை சப்தாவர்ணம், இரவு வெட்டி வேர் சப்பரத்தில் பவனி. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் காலை கருட வாகனம், இரவு அனுமன் வாகனத்தில் பவனி.

மே 16, வைகாசி 2: காரைக்குடி கொப்புடைய நாயகி வெள்ளிக்குதிரை வாகனம், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் காலை சேஷ வாகனம், இரவு உபய நாச்சியார்களுடன் சந்திரபிரபையில் வீதியுலா, வீரபாண்டி கவுமாரியம்மன் முத்துச்சப்பரத்தில் தேர்தடம் பார்த்தல். சோளசிம்மபுரம் லட்சுமிநரசிம்ம பெருமாள் விடையாற்று உற்ஸவம், சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவடை தரிசனம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

மே 17, வைகாசி 3: வீரபாண்டி கவுமாரியம்மன் பொங்கல் விழா. காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் தேர், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலம், சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்.

மே 18, வைகாசி 4: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் காலை வேணுகானக்கண்ணன் திருக்கோலம், இரவு யானை வாகனத்தில் சூர்ணாபிசேகம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், வீரபாண்டி கவுமாரியம்மன், சோளசிம்மபுரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள் விடையாற்று உற்ஸவம். குமரகுருபர சுவாமிகள், திருஞானசம்பந்தர், முருகர், திருநீலகண்டர், திருநீலநக்கர் நாயனார் குருபூஜை.

மே 19 வைகாசி 5 : சங்கடஹர சதுர்த்தி, காரைக்குடி கொப்புடையநாயகி தெப்பம், இரவு புஷ்பப் பல்லக்கு, காஞ்சிபுரம் வரதராஜர் நாச்சியார்களுடன் தேர், சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சோளசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் கண்ணாடி பல்லக்கு, திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X