சங்கரரின் சம்மட்டி
மே 13,2022,14:21  IST

மனிதன் அடிக்கடி குழப்பத்திற்கு ஆளாகிறான். புத்தியில் தெளிவும், பக்தியில் உறுதியும் எளிதில் வருவதில்லை. குழப்பம் போக்கி மனிதனை நல்வழிப்படுத்த ஆதிசங்கரர் எழுதிய நுால் 'மோக முத்கரம்'.
'மோக முத்கரம்' என்பதற்கு 'ஆசையை உடைக்கும் சம்மட்டி' என்பது பொருள். இந்நுாலுக்கு 'பஜகோவிந்தம்' என்றும் பெயருண்டு. இதைப் படித்தால் பிறவி என்னும் பெருங்கடலை, சிறு ஓடையைத் தாண்டுவது போல எளிதில் தாண்டலாம். இந்த பாடலின் முதல் வரியில் 'பஜ கோவிந்தம்' என்னும் சொல் மூன்று முறை இடம் பெற்றுள்ளது. ஏதேனும் ஒன்றை உறுதிபட சொல்ல விரும்பினால் அருளாளர்கள் மூன்று முறை சொல்வர். கோவிந்தா என்னும் திருநாமத்தை பக்தியுடன் சொன்னால் மனம் துாய்மை பெறும் என்கிறார் ஆதிசங்கரர்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X