உலகின் பெரிய கோயில்கள்
மே 13,2022,14:24  IST

மீனாட்சியம்மன் கோயில், மதுரை
* 2 தங்க விமானம், 14 கோபுரங்கள் இங்கு உள்ளன. தெற்கில் உள்ள ராஜகோபுரத்தின் உயரம் 170 அடி.
* நடராஜர் வலதுகாலை ஊன்றி இருப்பது வழக்கம். ஆனால் இங்கு இடது காலை ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார்.
* 64 திருவிளையாடல்களை சிவபெருமான் நிகழ்த்திய தலம்.
* இங்கு அம்மனை வணங்கிய பிறகே சிவனை வணங்க வேண்டும்.
* தமிழகத்திலுள்ள 366 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களின் மூலக்கோயில்.

அங்கோர்வாட் விஷ்ணுகோயில், கம்போடியா
* கி.பி 1113 - 1150ல் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது.
* 162.6 எக்டேர் பரப்பு கொண்டது.
* கம்போடியா நாட்டின் சின்னமாக உள்ளது.
* பள்ளி கொண்டநிலையில் விஷ்ணு இங்கு இருக்கிறார்.

நடராஜர் கோயில், சிதம்பரம்
* பூலோக கைலாயம் எனப்படும் இத்தலம் சிவன் கோயில்களில் முதன்மையானது.
* சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகரால் பாடல் பெற்றது.
* 40 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு சிவனின் ஐந்து சபைகள் உள்ளன.
* கனக சபையின் பொற்கூரை பராந்தக சோழனால் கட்டப்பட்டது.
* கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்கள் இடம் பெற்றுள்ளன.

ரங்கநாதர்கோயில், ஸ்ரீரங்கம்
* 108 திவ்ய தேசங்களில் முதல் தலம்.
* 156 ஏக்கர் பரப்பு கொண்டது.
* தென்னிந்தியாவின் பெரியராஜ கோபுரம் இங்குள்ளது (239 அடி)
* 21 கோபுரங்களும், 7 மதில் சுவர்களும் உள்ளன.

பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
* கி.பி. 11ம் நுாற்றாண்டில் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
* மூலவர் 54 அடி சுற்றளவுள்ள ஆவுடையுடன் 23 அடி உயர பாணத்துடன் இருக்கிறார்.
* 20 டன் எடையில் ஒரே கல்லால் ஆன நந்தி சிலை உள்ளது.
* தட்சிண மேரு என்னும் 216 அடி உயர விமானம் இங்குள்ளது.

அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை
* 24 ஏக்கர் பரப்பு, 6 பிரகாரம், 9 ராஜகோபுரமும் கொண்ட கோயில்.
* கிழக்கு கோபுரம் 216 அடி உயரம் கொண்டது.
* 142 சன்னதி, 22 பிள்ளையார், 306 மண்டபங்கள் உள்ளன.
* திருக்கார்த்திகையன்று 2668 அடி உயரத்தில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்
* 23 ஏக்கர் பரப்பும், 180 அடி உயர கிழக்கு கோபுரமும் கொண்டது.
* கல்யாண மண்டபத்தில் இருக்கும் தொங்கும் கற்சங்கிலிகள், சிற்பக்கலைக்கு சான்று.
* குளத்தில் மூழ்கி இருக்கும் அத்திவரதரை 40 ஆண்டுக்கு ஒருமுறை எடுத்து வழிபடுவர்.
* இங்கு தங்கம், வெள்ளியாலான பல்லிக்கு சன்னதி உள்ளது.

நெல்லையப்பர் கோயில், திருநெல்வேலி
* 2000 ஆண்டு பழமை மிக்க இக்கோயில் 14 ஏக்கர் பரப்பு கொண்டது.
* தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய தேர் கொண்டது.
* நடராஜரின் ஐந்து சபைகளில் தாமிர சபை இங்குள்ளது.
* கருவறையில் சிவனுடன் பள்ளி கொண்ட பெருமாளும் காட்சியளிக்கிறார்.

ஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்
* கி.பி. 1509ல் கட்டப்பட்டது. பஞ்சபூதங்களில் மண்ணுக்குரிய தலம் இது.
* 25 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு கோபுரம் 190 அடி உயரம் கொண்டது.
* முக்தி தலங்கள் ஏழில் இதுவே முதன்மையானது.
* சிவலிங்கம் மண்ணால் ஆனதால் அபிஷேகம் கிடையாது.

தியாகராஜசுவாமி கோயில், திருவாரூர்
* 30 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு கிழக்கு கோபுரத்தின் உயரம் 98 அடி.
* ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இங்குள்ளது. இதை ஆழித்தேர் என்பர்.
* 9 ராஜகோபுரம், 80 விமானம், 12 மதில்கள், 13 மண்டபம், 15 தீர்த்தக்கிணறு, 3 தோட்டம், 3 பிரகாரம், 24 உட்கோயில்கள், 365 சிவலிங்கம், 86 விநாயகர் சன்னதிகள் உள்ளன.
* இங்குள்ள கமலாலய குளம் 30 ஏக்கர் பரப்பு கொண்டது.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X