நம்பியவரைக் காப்பார் நடராஜர்
மே 24,2022,09:37  IST

ஓம் அம்பலத்தரசனே போற்றி
ஓம் அருமருந்தானவனே போற்றி
ஓம் அம்மையப்பனே போற்றி
ஓம் அழகனே போற்றி
ஓம் அபயகரத்தானே போற்றி
ஓம் அகத்தாடுபவனே போற்றி
ஓம் அஜபா நடனனே போற்றி
ஓம் அம்பல வாணனே போற்றி
ஓம் அம்ச பாத நடனனே போற்றி
ஓம் அபிேஷகப் பிரியனே போற்றி
ஓம் அர்க்க மலர்ப்பிரியனே போற்றி
ஓம் அருள் தாண்டவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசனே போற்றி
ஓம் ஆடலரசனே போற்றி
ஓம் ஆனந்த தாண்டவனே போற்றி
ஓம் ஆட்டுவிப்பனே போற்றி
ஓம் ஆடியடக்குபவனே போற்றி
ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
ஓம் ஆதி இறைவனே போற்றி
ஓம் இசையரசனே போற்றி
ஓம் இன்னிசைப் பிரியனே போற்றி
ஓம் இடப வாகனனே போற்றி
ஓம் ஈர நெஞ்சினனே போற்றி
ஓம் ஈர்க்கும் இறைவனே போற்றி
ஓம் ஈஸ்வர மூர்த்தியே போற்றி
ஓம் உடுக்கை ஏந்துபவனே போற்றி
ஓம் உன்மத்த நடனனே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உமாதாண்டவனே போற்றி
ஓம் ஊழித்தாண்டவனே போற்றி
ஓம் ஊர்த்துவ தாண்டவனே போற்றி
ஓம் கலையரசனே போற்றி
ஓம் கங்காதர மூர்த்தியே போற்றி
ஓம் கமல நடனனே போற்றி
ஓம் கவுரி தாண்டவனே போற்றி
ஓம் கவுமாரப் பிரியனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் கனக சபையனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கங்காவதரண நடனனே போற்றி
ஓம் கால்மாறியாடியவனே போற்றி
ஓம் கிங்கிணி பாதனே போற்றி
ஓம் குக்குட நடனனே போற்றி
ஓம் குஞ்சித பாதனே போற்றி
ஓம் கூத்தப்பிரானே போற்றி
ஓம் கூழ் ஏற்றவனே போற்றி
ஓம் சடைமுடியோனே போற்றி
ஓம் சங்கரமூர்த்தியே போற்றி
ஓம் சத்ரு சம்காரனே போற்றி
ஓம் சமர்த்தனே போற்றி
ஓம் சதுர தாண்டவனே போற்றி
ஓம் சந்தியா தாண்டவனே போற்றி
ஓம் சம்கார தாண்டவனே போற்றி
ஓம் சித் சபையோனே போற்றி
ஓம் சிவசக்தி ரூபனே போற்றி
ஓம் சிவகாமிநாயகனே போற்றி
ஓம் சுயம்புமூர்த்தியே போற்றி
ஓம் சுந்தர தாண்டவனே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
ஓம் சூழ் ஒளியோனே போற்றி
ஓம் ஞான தாயகனே போற்றி
ஓம் ஞானசுந்தர தாண்டவனே போற்றி
ஓம் திரிபுராந்தகனே போற்றி
ஓம் தில்லைக் கூத்தனே போற்றி
ஓம் திருவாதிரை நாயகனே போற்றி
ஓம் திருவடிவானவே போற்றி
ஓம் திருமுறை பிரியனே போற்றி
ஓம் திருநீரு பூசியவனே போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தேவாதிதேவனே போற்றி
ஓம் நடனசபாபதியே போற்றி
ஓம் நாத வடிவானவனே போற்றி
ஓம் நாகாபரணனே போற்றி
ஓம் நாதாந்த நடனனே போற்றி
ஓம் நிலவணிந்தவனே போற்றி
ஓம் நிர்மலவானனே போற்றி
ஓம் நிருத்த சபையனே போற்றி
ஓம் நுாற்றெட்டு தாண்டவனே போற்றி
ஓம் பக்தருக்கு எளியவனே போற்றி
ஓம் பரம தாண்டவனே போற்றி
ஓம் பஞ்சசபையோனே போற்றி
ஓம் பதஞ்சலிக்கருளியவனே போற்றி
ஓம் பஞ்சாட்சரனே போற்றி
ஓம் பாவம் தீர்ப்பவனே போற்றி
ஓம் பிருங்கி நடனனே போற்றி
ஓம் பிரம்படி பட்டவனே போற்றி
ஓம் பிழம்பேந்தியவனே போற்றி
ஓம் புலித்தோல் அணிந்தவனே போற்றி
ஓம் புஜங்கலலித தாண்டவனே போற்றி
ஓம் பித்தா பிறைசூடியனே போற்றி
ஓம் பிரதோஷ தாண்டவனே போற்றி
ஓம் மண் சுமந்தவனே போற்றி
ஓம் மான் ஏந்தியவனே போற்றி
ஓம் மழு தாங்கியவனே போற்றி
ஓம் முக்கண் மூர்த்தியே போற்றி
ஓம் முனிதாண்டவனே போற்றி
ஓம் மும்மலம் அறுப்பவனே போற்றி
ஓம் முயலக சம்ஹாரனே போற்றி
ஓம் முக்தி அருள்பவனே போற்றி
ஓம் மூவா முதல்வனே போற்றி
ஓம் ராஜசபையோனே போற்றி
ஓம் ரட்சக தாண்டவனே போற்றி
ஓம் ருத்ர தாண்டவனே போற்றி
ஓம் ருத்ராட்சப்பிரியனே போற்றி
ஓம் குணவிமோசனனே போற்றி
ஓம் விரிசடையோனே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X