சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
மே 24,2022,09:40  IST

* பணப் பரிவர்த்தனையை செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் செய்வது நல்லது. கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவராலும் பணத்தை திரும்ப கொடுக்க இயலும்.
* கடவுள் சிலைகளை கல், உலோகம் என கருதக்கூடாது.
* அரையர் சேவை என்பது நடனமாடியபடியே நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் பாடுவதாகும்.
* முதன் முதலில் அரையர் சேவையை கோயில்களில் தொடங்கியவர் நாதமுனிகள்.
* ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீரங்கம், கர்நாடக மாநிலத்திலுள்ள மேல்கோட்டை ஆகிய திவ்ய தேசங்களில் அரையர் சேவை நடக்கிறது.
* பெரிய புராணத்தில் 4287 பாடல்கள் உள்ளன. இதில் திருஞானசம்பந்தர் வரலாறு 1256 பாடல்களில் இடம் பெற்றுள்ளது.
* திருஞான சம்பந்தர் பாடிய தேவார பாடல்களை திருக்கடைக்காப்பு என்று அழைப்பர்.
* தேவாரம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் 'இரட்டைப்புலவர்கள்' (இளஞ்சூரியர், முதுஞ்சூரியர்)
* விளக்கைத் தரையில் வைக்கக்கூடாது. பலகை மீது வைக்க வேண்டும். செவ்வாய், வெள்ளி தவிர்த்த மற்ற நாட்களில் விளக்கைச் சுத்தம் செய்யலாம்.
* உடல், மனம் நலமுடன் இருக்க இஷ்ட தெய்வத்திற்கு வாரம் ஒரு முறை விரதம் இருப்பது நல்லது.
* பஞ்ச கன்னியர் - அகலிகை, சீதை, தாரை, திரவுபதி, மண்டோதரி.
* பஞ்சரத்தினம் - வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
* பஞ்ச வர்ணம் - வெள்ளை, கருப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை.
* பஞ்சமா பாதகம் - பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.
* மகாவிஷ்ணு ஆயுதங்கள் - சங்கு, சக்கரம், கதாயுதம், வாள், வில்.
* பாகவத புராணத்தை எழுதியவர் செவ்வை சூடுவார்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X