* லட்சியத்தை குறித்து ஆழமாக சிந்திக்கிறாயா.. விரைவில் அதை அடையப்போகிறாய் என்று பொருள்.
* அறிவுக் கடலாக கடவுள் உள்ளார். அதில் நாம் ஒரு நீர்த்துளியாக இருக்கிறோம்.
* உண்மையான பக்தி இருந்தால் நீ கேட்பதை கடவுள் கொடுப்பார்.
* தினமும் தியானம் செய். மனதில் புத்துணர்ச்சி பிறக்கும்.
* உயிர் இரக்கமே தர்மங்களில் மேலானது.
* உண்மையான அன்பு கொண்டவன் யார் மீதும் கோபப்பட மாட்டான்.
* அன்பு இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
* மலர்ந்த முகமும் இனிய சொல்லும் தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வழி.
* மனதில் பயம் இருக்கும் வரை நீ அறிவாளியாக முடியாது.
* குழந்தைகளுக்கு கல்வியோடு சேர்த்து விளையாட்டையும் கற்றுக்கொடு.
* ஏழைக் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள். அது சிறந்த தானம்.
* உன்னை திருத்திக் கொள்ள முடியவில்லை என்றால் பிறரை திருத்தும் அதிகாரத்தை இழந்து விடுகிறாய்.
* தவறுகளை மன்னிக்கும் பெருந்தன்மை நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.
* வீடு, நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம்.
* இன்று புதிதாய் பிறந்தோம் என எண்ணினால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
* அதர்மம் இருந்தால் தான் தர்மத்தின் அருமை புரியும்.
ஊக்கப்படுத்துகிறார் பாரதியார்