இந்த வாரம் என்ன
மே 24,2022,09:53  IST

மே 20, வைகாசி 6: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் குதிரை வாகனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், திருத்தணி முருகன் கிளி வாகன சேவை, திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடு, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல்.

மே 21, வைகாசி 7: திருவோண விரதம், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தீர்த்தவாரி, ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு, சாத்துார் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி, ஸ்ரீவில்லிபுத்துார் பெரியபெருமாள் பவனி, குச்சனுார் சனிபகவான் அபிஷேகம், கரிநாள்

மே 22, வைகாசி 8: திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் தாமிரபரணி தீர்த்தத்தில் திருமஞ்சனம், அகோபிலமடம் 27 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்

மே 23, வைகாசி 9: சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், பைரவர் தேய்பிறை அஷ்டமி அபிஷேகம்.

மே 24, வைகாசி 10: சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிபெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்.

மே 25, வைகாசி 11: சுபமுகூர்த்தம், தத்தாத்ரேய ஜயந்தி, திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம்.

மே 26, வைகாசி 12: சுபமுகூர்த்தம், ஏகாதசி விரதம், தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னாருடன் எழுந்தருளல், திருமோகூர் காளமேகப்பெருமாள், அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு, சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X