" நுாறாண்டு காலம் வாழ்க " என வாழ்த்துவது வழக்கம். இன்னும் கூடுதல் காலம் வாழக்கூடாதா என்ற எண்ணம் சிலருக்கு எழும். இதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்வோமா? நுாறாண்டுகள் வாழ்வதை 'சதமானம் பவதி' என்று வேதம் சொல்கிறது. சதம் என்றால் நுாறு. மனித வாழ்வு 120 வயது என்பது நியதி. ஜாதகம் எழுதும் போது 120 ஆண்டுகளுக்கு தசாபுத்தி குறிப்பது வழக்கம்.
இந்த 120 ஆண்டுகளில் முதல் நான்கு ஆண்டுகள் குழந்தை பருவம் இதில் என்ன செய்தோம் என்பது ஞாபகத்தில் இருக்காது. ஐந்து முதல் 120 வயது வரை (116 ஆண்டுகள்) தர்மத்தை கடைபிடித்து வாழ வேண்டும். இதனால் தான் ஆந்திரா, தெலுங்கானாவில் புரோகிதர்களுக்கு தட்சணை கொடுக்கும்போது 116, 1116, என பணம் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. 120 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர் ராமானுஜர்.