பிரச்னை தீர்ப்பாள் பிரத்யங்கரா
மே 26,2022,10:29  IST

ஓம் சகல நாயகி போற்றி
ஓம் சர்வ பிரத்யங்கரா தேவி போற்றி
ஓம் தர்ம பரிபாலதையே போற்றி
ஓம் தக்க வரமருள் தாயே போற்றி
ஓம் துக்க நிவாரணி மாதா போற்றி
ஓம் துஷ்ட சிஷ்ட சம்ஹார போற்றி
ஓம் இஷ்ட குண சோதரியே போற்றி
ஓம் கஷ்ட வழி தகர்ப்பாய் போற்றி
ஓம் எண்ணவரும் பிரத்யங்கரா போற்றி
ஓம் ரூபமது ஓங்காரியே போற்றி
ஓம் வரிந்த தோற்றமானாய் போற்றி
ஓம் நெடிதுயர் விஸ்வரூபி போற்றி
ஓம் ஹரத்துள்ளாயே போற்றி
ஓம் கபால மாலையணிந்தாயே போற்றி
ஓம் எண்ணிலா சிரமுள்ளாய் போற்றி
ஓம் எண்ணமதி அறிவாய் போற்றி
ஓம் வண்ண உயிர் வடிவே போற்றி
ஓம் சிம்மவாகினி பிரத்யங்கரா போற்றி
ஓம் சிங்க முகமுடையவளே போற்றி
ஓம் சூலமது ஏந்தினாயே போற்றி
ஓம் சதுர்கரம் தரித்தாயே போற்றி
ஓம் சம்ஹார சக்தியே போற்றி
ஓம் சர்வ பாப நாசினியே போற்றி
ஓம் சிவந்தவிழி கொண்டாய் போற்றி
ஓம் தெற்றுப்பல் எண்ணிலாய் போற்றி
ஓம் சந்திரனை தரித்தாயே போற்றி
ஓம் இந்திரனை பணித்தாயே போற்றி
ஓம் கர்ண கோர ரூபமே போற்றி
ஓம் ஞானவழி எழிலே போற்றி
ஓம் நாளும் இடரழிப்பாய் போற்றி
ஓம் பாடும் மனம் அமர்வாய் போற்றி
ஓம் ஓடும் மனம் நிறுத்துவாய் போற்றி
ஓம் வாடும் பயிர் காப்பாய் போற்றி
ஓம் வானம் பூமி காப்பாய் போற்றி
ஓம் ரூபா ரூபம் கலந்தாய் போற்றி
ஓம் வினை நீக்கும் பிரத்யங்கரா போற்றி
ஓம் எதிர்வினை பொசிப்பாய் போற்றி
ஓம் ஏவியோரை அழிப்பாய் போற்றி
ஓம் எல்லோர்க்கும் சமமே போற்றி
ஓம் ஏற்றத் தாழ்வு இல்லாய் போற்றி
ஓம் பக்தர் மனம் வசிப்பாய் போற்றி
ஓம் பக்தர் குறை தீர்ப்பாய் போற்றி
ஓம் முக்தி தரும் சக்தியே போற்றி
ஓம் சித்தி வழி சித்தியே போற்றி
ஓம் சக்தி தரும் பிரத்யங்கரா போற்றி
ஓம் சிவந்தவாழி பேரெழிலே போற்றி
ஓம் உகந்த வழி காட்டுவாய் போற்றி
ஓம் புகழும் மொழி வருவாய் போற்றி
ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
ஓம் தவம் தரும் யோகமாயே போற்றி
ஓம் தயாபரியாய் நின்றாய் போற்றி
ஓம் கண்ணுாறு நசித்தாய் போற்றி
ஓம் சூன்ய ஏவல் எரிப்பாய் போற்றி
ஓம் சர்வ லோக பிரத்யங்கரா போற்றி
ஓம் பத்ரகாளி வடிவே போற்றி
ஓம் பாரோச்சும் சக்தியே போற்றி
ஓம் சூலினியின் துணையே போற்றி
ஓம் சூரர்களை வதைப்பாய் போற்றி
ஓம் சூழ்ச்சியின் வீழ்ச்சியே போற்றி
ஓம் சுந்தர வதன மாதேவி போற்றி
ஓம் நெருப்பின் நெருப்பானாய் போற்றி
ஓம் விருப்பமது அணைப்பாய் போற்றி
ஓம் திருப்பமது பிரத்யங்கரா போற்றி
ஓம் மகிஷாசுர மர்த்தினியே போற்றி
ஓம் மாவீர கோகிலமே போற்றி
ஓம் சர்வபாப விநாசனி போற்றி
ஓம் சத்ய ஜோதி வடிவமே போற்றி
ஓம் உள்ளம் உள்ளதறிவாய் போற்றி
ஓம் உகந்தது தருவாய் போற்றி
ஓம் நினைத்தது நடத்துவாய் போற்றி
ஓம் கணித்தது புகுவாய் போற்றி
ஓம் விரைந்து வரும் பிரத்யங்கரா போற்றி
ஓம் ஆபத் சகாயமே போற்றி
ஓம் ஆகாய வெளிவழியே போற்றி
ஓம் ஆயிரம் விழி ஜோதியே போற்றி
ஓம் ஆதரவு தர வருவாய் போற்றி
ஓம் சங்கர ஸ்வரூபியே போற்றி
ஓம் பார்வதி சக்தி தாயே போற்றி
ஓம் ப்ராண ரூப ஆட்சியே போற்றி
ஓம் பிரணவ ரூப ஒலியே போற்றி
ஓம் சரணாகதம் பிரத்யங்கரா போற்றி
ஓம் புவனேஸ்வரி வடிவே போற்றி
ஓம் புவன யோக சக்தியே போற்றி
ஓம் யுக யுகாந்திர சக்தியே போற்றி
ஓம் தவ ரூப மாயா வடிவே போற்றி
ஓம் பூத பிரேத நாசினி போற்றி
ஓம் யோக தவமருள்வாய் போற்றி
ஓம் வன நேச பாரிதியே போற்றி
ஓம் குண ரூப சாரதியே போற்றி
ஓம் வரவேண்டும் பிரத்யங்கரா போற்றி
ஓம் டமருகம் தரித்தாய் போற்றி
ஓம் சூலமும் கொண்டாய் போற்றி
ஓம் பக்தரின் பிரியமே போற்றி
ஓம் பணிந்தோர்க்கு காவலே போற்றி
ஓம் ராஜராஜ தேவியே போற்றி
ஓம் காருண்ய வடிவே போற்றி
ஓம் வித்தையின் அதிபதியே போற்றி
ஓம் வித்வ மூல சித்தமே போற்றி
ஓம் வேண்டியதருள் பிரத்யங்கரா போற்றி
ஓம் கற்பக விருட்சமானாய் போற்றி
ஓம் காமதேனு வடிவே போற்றி
ஓம் காற்று நீர் நெருப்பே போற்றி
ஓம் சித்த வித்யா புத்தியே போற்றி
ஓம் தத்துவ சத்தியத் தாயே போற்றி
ஓம் மகாபல சக்தியே போற்றி
ஓம் மகா பைரவி தேவியே போற்றி
ஓம் நலம் தரும் நாயகியே போற்றி
ஓம் ஆத்ம லய பிரத்யங்கரா போற்றி

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X