* விநாயகருக்கு உகந்தது வெள்ளிக்கிழமை. அன்று விரதம் இருந்தால் அவரின் அருளை விரைவில் பெறலாம்.
* முன்பின் தெரியாதவர்களுக்கு நாம் பயன்படுத்திய ஆடைகளை கொடுக்கக்கூடாது.
* வியாபாரிகள் விபூதி அணிந்து கொண்டு வியாபாரம் செய்தால் லாபம் பெருகும்.
* பசுவானது கன்றை ஈனும்போது அப்பசுவை 14 முறை சுற்றினால் உலகத்தை சுற்றிவந்த பலன் கிடைக்கும்.
* பூஜையின்போது பிரசாதமாக கற்கண்டு, உலர்திராட்சை, பேரீச்சம்பழம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைப்பது அவசியம்.
* காலை 7:00 மணிக்குள் குளித்து முடித்துவிட்டு, சூரிய பகவானை வணங்குவது சிறப்பு.
* வளர்பிறை பஞ்சமி, சஷ்டி ஆகிய இரு நாட்களில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு பார்வதிதேவியை பூஜிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
* ஒருவர் இறந்து ஓராண்டு கழிந்த பின்னரே அந்த ஆன்மா மேலுலகம் செல்கிறது. எனவே ஓராண்டு காலத்திற்கு எந்தவொரு சுபநிகழ்ச்சியும் கூடாது.
* ஒரு பெண் ஆனி, புரட்டாசியில் ருதுவானால் பெரும் செல்வ நிலையை அடைவாள்.
* பணம், நகை வைக்கும் பாதுகாப்பு பெட்டகத்தில் உலர்ந்த திராட்சையை வைத்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.