* ராம நாமம் சொல்ல எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. எந்த நேரத்திலும் சொல்லலாம்.
* ராம நாமத்தை மூன்று முறை சொன்னாலே விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்ன பலன் கிடைக்கும்.
* அனுமனுக்கு வாக்கு, வன்மை, வீரம், சாதுரியம் என அனைத்துமே ராமநாமத்தின் மகிமையால்தான் கிடைத்தது.
* ராம நாமத்தை சொன்னாலும், எழுதினாலும் பயம் நீங்கும்.
* நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றி பெற தினமும் 'ஸ்ரீராம ஜயம்' என்று எழுதுங்கள்.
* உங்களுக்கு நன்மையும், செல்வமும் கிடைக்கும். நீங்கள் செய்த பாவம் தேய்ந்து போகும். பிறப்பு, இறப்பு எனும் சங்கிலியில் இருந்து விடுபடுவீர்கள். அதுவும் இந்தப்பிறவியிலேயே எல்லாம் நடக்கும். அது எப்படி.. 'இராம' எனும் இரண்டு எழுத்தை சொன்னால் சாத்தியம். இது சத்தியம். இதுவே கம்பரின் வாக்கியம்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே-
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்.