மே 27, வைகாசி 13: பிரதோஷம், நாகபட்டினம் காயாரோகண சுவாமி உற்ஸவம் ஆரம்பம், திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல்
மே 28, வைகாசி 14: மாத சிவராத்திரி, அக்னி நட்சத்திரம் முடிவு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜர் திருமஞ்சனம், அகோபிலமடம் 39வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம், நாகபட்டினம் காயாரோகண சுவாமி பவனி, திருப்போரூர் முருகன் ஆராதனை, கழற்சிங்கர் குருபூஜை
மே 29, வைகாசி 15: கார்த்திகை விரதம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் அனுமன் திருமஞ்சனம், பழநி, திருச்செந்துார் முருகன் புறப்பாடு, திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சனம்
மே 30, வைகாசி 16: அமாவாசை, நாகபட்டினம் காயாரோகண சுவாமி பவனி, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல், மன்னார்குடி ராஜகோபால சுவாமி பவனி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திரம், கரிநாள்
மே 31, வைகாசி 17: சிவகாசி விஸ்வநாதர் பூச்சப்பரத்தில் பவனி, சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம், கரிநாள்
ஜூன் 1, வைகாசி 18: சுபமுகூர்த்தம், சந்திர தரிசனம், நாகபட்டினம் காயாரோகண சுவாமி புறப்பாடு, சிவகாசி விஸ்வநாதர் பூதவாகனம், திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம், செடி, கொடிகள் வைக்க நல்ல நாள்.
ஜூன் 2, வைகாசி 19: ரம்பா திரிதியை, மாதவி விரதம், சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனம், நாகபட்டினம் காயாரோகண சுவாமி பவனி, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு, திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் தாமிரபரணி தீர்த்தத்தில் திருமஞ்சனம்.