கேளுங்க சொல்கிறோம்
ஜூன் 03,2022,12:06  IST

பி.லதா, மதுரை.
*கர்ப்பிணிகள் எந்த புத்தகங்களைப் படிப்பது நல்லது?

பக்தி, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, மனஅமைதியை வளர்க்கும் புத்தகங்களை படியுங்கள்.

சி.கதிரவன், திருப்பூர்.
*குடிப்பழக்கத்தை மறக்க என்ன செய்ய வேண்டும்?

தீயவர்களின் நட்பை கைவிட்டு, நல்லவர்களுடன் மட்டும் உறவாடுங்கள். தினமும் கோயிலில் வழிபாடு செய்ய மறக்காதீர்கள்.

வி.வானதி, கோவில்பட்டி.
* வேண்டுதல் நிறைவேறவில்லையே என கடவுள் மீது கோபிக்கலாமா?

கோபிக்கக் கூடாது. ஒருவர் தேர்வில் வெற்றி பெறாவிட்டால் 'எனக்கு அதிக மதிப்பெண் தரவில்லையே' என ஆசிரியரை திட்டுவது நியாயமா... அனைத்தும் அறிந்த கடவுள் தவறு செய்வாரா... முன் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையிலேயே வாழ்வு அமையும். இதை உணர்ந்தால் கோபம் வராது.

ஆர்.அரவிந்த், பெங்களூரு.
*ஏழையின் சிரிப்பில் கடவுளைக் காண முடியுமா?

காண முடியும். ஏழைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் அளியுங்கள். அவர்களின் முகத்தில் கடவுளைக் காண்பீர்கள்.

எம்.யசோதா, டில்லி.
*வயதாகி விட்டதால் முன்பு போல என்னால் கோயில் வழிபாடு செய்ய முடியவில்லையே...

வருத்தம் வேண்டாம். வீட்டில் வழிபட்டாலும் கடவுளின் அருள் கிடைக்கும்.

கே.ஆனந்தி, நாகர்கோவில்.
*ஜகத்குரு, சத்சங்கம் விளக்கம் தேவை.

அனைவரிடமும் அன்பு காட்டி நல்ல விஷயங்களைச் சொல்பவரே ஜகத்குரு. உதாரணம் காஞ்சி மஹாபெரியவர். இவர் நாத்திகரையும் ஆத்திகராக மாற்றும் வலிமை கொண்டவர். இவரைப் போன்ற துறவிகளின் நல்ல உபதேசங்களைக் கேட்க கூடும் கூட்டமே சத்சங்கம்.

பி.துர்கா, திருவள்ளூர்.
*'எனக்கு அதைக் கொடு; இதைக் கொடு' என கடவுளிடம் கேட்கலாமா...

தேவையில்லை. யாருக்கு, எதை, எப்போது, எப்படி கொடுக்க வேண்டும் என அறியாதவரா கடவுள்... ஆனாலும் அறியாமையால் நம் விருப்பத்தை கேட்கிறோம்.

எல்.வித்யா, சிவகங்கை.
*விளக்கு வைத்தபின் வெளியில் குப்பை கொட்டக் கூடாதா ஏன்?

விளக்கு வைத்தபின் வீட்டைப் பெருக்குவது, ஒட்டடை அடிப்பது, குப்பையை வெளியில் கொட்டுவது கூடாது. மீறினால் செல்வம் குறையும்.

எஸ்.ரவிவர்மன், விழுப்புரம்.
*பாப விமோசன தீர்த்தம் என்றால் என்ன
?
விமோசனம் என்பதற்கு போக்குவது என்பது பொருள். கோயிலில் உள்ள குளம், தீர்த்தங்களை 'பாப விமோசன தீர்த்தம்' என்பார்கள். இதில் நீராடினால் நம் பாவம் தீரும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X