கேளுங்க சொல்கிறோம்
ஜூன் 10,2022,08:23  IST

வே.தேவஜோதி, மதுரை
*கர்ம வினையிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?
கடவுளைச் சரணடைந்தால் கர்மவினையில் இருந்து தப்பிக்கலாம். அதன் பின்னர் யாருக்கும் தீமை செய்யக் கூடாது.

க.கிரிஜா, சங்கரன்கோவில்
*குடும்பத்தில் இரண்டு நபருக்கு ஒரே நட்சத்திரம் இருந்தால் சண்டை வருமா?
ஏன் சண்டை வரணும்... சந்திராஷ்டமம் அன்று இருவரும் பேச்சைக் குறைக்கலாமே. கிரகப்பெயர்ச்சியால் ஏற்படும் நன்மை, தீமை ஒரே மாதிரியாக இருக்கும்.

எம்.ஆதிரை, புதுச்சேரி
*செலவில்லாமல் பரிகாரம் செய்தால் பலன் கிடைக்குமா?
ஆடம்பரமாக பூஜை செய்தால் தான் பலன் கிடைக்கும் என நினைப்பது தவறு. எளிமையாகவும் பரிகாரம் செய்யலாம்.

டி.கலாவதி, சென்னை
*குளிகை நேரத்தில் எந்த செயல்களில் ஈடுபடலாம்?
இறப்புச் சடங்குகள் தவிர்த்த மற்ற எல்லாச் செயல்களிலும் ஈடுபடலாம்.

ஆர்.வனிதா, நாகர்கோவில்
*இளம்வயது பாகவதர்களை வலம் வரலாமா?
பகவான் என்பதில் இருந்து வந்த சொல்தான் பாகவதர். பக்தர்களான இவர்கள், இளைஞராக இருந்தாலும் வலம் வந்து வணங்கினாலும் நன்மை கிடைக்கும்.

ஆர்.ரங்கன், டில்லி
*தினமும் இரவு கனவுகளால் சிரமப்படுகிறேன். பரிகாரம் உண்டா...
ஆன்மிகச் சொற்பொழிவு, பக்திப் பாடல்கள் கேளுங்கள். கனவு தொல்லை இருக்காது.

டி.பவித்ரா, பெங்களூரு
*சில கோயில்களில் சுவாமியை சுயம்பு மூர்த்தி என்கிறார்களே ஏன்?
செதுக்கப்படாமல் உருவான கடவுள் சிலையை 'சுயம்பு மூர்த்தி' என்பர். சுயம்பு என்றால் 'தானாக தோன்றியது' என பொருள்.

பி.சேகர், கோவை
*பூக்கள் இல்லாத பட்சத்தில் இலைகளால் சுவாமியை பூஜிக்கலாமா?
பூக்கள் இல்லாத பட்சத்தில் பூஜிக்கலாம். சிவபெருமானை வில்வ இலையாலும், பெருமாளை துளசி இலையாலும் அர்ச்சனை செய்கிறோமே!

ஏ.ஆறுமுகம், திருத்தணி
*முன்னோர்கள் படங்கள் தெற்கு நோக்கித் தான் இருக்க வேண்டுமா
கட்டாயமில்லை. கிழக்கு நோக்கியும் வைக்கலாம்.

கே.ஆர்த்தி, சிவகங்கை
*பிள்ளைகளில் ஒருவரை வாழ்த்தியும், மற்றொருவரை துாற்றியும் வளர்த்த பெற்றோருக்கு திதி கொடுக்க மனமில்லை. இது சரியா?
இறந்தவர்களின் மீது விரோதம் காட்டுவது தவறு. உயிருடன் இருக்கும் வரையே அவர்கள் நம் பெற்றோர்கள். இறந்ததும் அவர்கள் பிதுர்தேவதையாக அதாவது தெய்வமாகி விடுவர். ஆண்டுதோறும் அவர்களுக்கு திதி கொடுத்து ஆசி பெறுவது நம் கடமை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X