பெரிதாக வளர்ந்திருந்தது ஒரு தேக்குமரம். ஆனால் அது சோகமாக இருந்தது. இதை அருகில் இருந்து கவனித்த முள்செடி, ''அண்ணே... நீங்க ஏன் எப்ப பார்த்தாலும் கவலையாகவே இருக்கீங்க?'' என கேட்டது.
''உனக்கென்னப்பா கவலை இருக்கு. உன்னை யாரும் கண்டுக்கக்கூட மாட்டார்கள். ஆனால் நானோ மனிதர்களுக்கு பலவிதங்களில் பயன்படுவதால் என்னை கூடிய சீக்கிரத்தில் வெட்டிவிடுவார்கள்'' என வருத்தப்பட்டது தேக்குமரம்.
''அடப்போங்கண்ணே... நான்தான் இப்படி இருக்கிறேன். நீங்களுமா...'' என இழுத்தது முள்செடி.
இந்த மரம், செடிகளை போலவே நம்மில் பலரும் இருக்கிறோம். எப்படி என்றால்... நம்மிடம் ஆயிரம் பலம் இருந்தாலும், ஒரு பலவீனம் மட்டுமே கண்களுக்கு தெரியும். இதனால் தேவையில்லாத வருத்தம்தான் மிஞ்சும். எப்போதும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். பலத்தை பலவீனமாகவும், பலவீனத்தை பலமாகவும் மாற்றும் சக்தி காலத்திற்கு உள்ளது. எனவே உள்ளதை வைத்து நிறைவாக வாழுங்கள்.