* நல்ல மனம் கொண்டவர்கள்தான் சத்தியத்தை விரும்புவார்கள்.
* பிரச்னையில் இருந்து விலகி நில்லுங்கள். அதுவே முன்னேற்றத்திற்கான வழி.
* வெறும் வாய்ப்பேச்சினால் எவ்வித பலனும் கிடைக்காது.
* அன்பான வார்த்தைகளை பிறருக்கு பரிசாக கொடுங்கள்.
* நல்லதை செய்யுங்கள். முடியாவிட்டால் அமைதியாக இருங்கள்.
* உங்கள் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் நிச்சயம் கிடைக்கும்.
* ஆண்டவர் மேல் உங்கள் பாரத்தை வைத்துவிடுங்கள்.
* நான் தர்மம் செய்தேன் என்று தற்பெருமை பேசாதீர்கள்.
* ஏழைகளுக்கு உதவி செய்வோர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்கள்.
* ஆர்வமிக்க உள்ளத்தோடு வேலை செய்யுங்கள்.
- பொன்மொழிகள்