இந்த வாரம் என்ன
ஜூன் 10,2022,08:42  IST

ஜூன் 10, வைகாசி 27: முகூர்த்த நாள், மயிலாடுதுறை கவுரிமாயூர நாதர் குதிரை வாகனம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் குதிரை வாகனம், பழநி முருகன் கிடா வாகனம். திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் புன்னை மர வாகனம், மதுரை கூடலழகர் யானை வாகனம்.

ஜூன் 11, வைகாசி 28: ராம லட்சுமணத்துவாதசி, நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் வெள்ளித்தேர். பழநி முருகன் திருக்கல்யாணம், திருமோகூர் காளமேகப்பெருமாள் குதிரை வாகனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் வெள்ளி யானை வாகனம், காளையார்கோவில், திருவாடானை, திருப்புத்துார் சிவன் கோயில்களில் தேர்.

ஜூன் 12, வைகாசி 29: பிரதோஷம், வைகாசி விசாகம், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் தேர். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு, திருப்பரங்குன்றம் முருகனுக்கு பாலாபிஷேகம். திருப்புத்துார் சிவன் தெப்பம். சோழவந்தான் ெஜனகை மாரியம்மன் அன்ன வாகனம், பழநி முருகன் தேர்.

ஜூன் 13,வைகாசி 30: முகூர்த்த நாள், மதுரை கூடலழகப்பெருமாள் தேர். திருப்பரங்குன்றம் முருகன் மொட்டையரசுக்கு எழுந்தருளல். காஞ்சி குமரக்கோட்டம் சிவபெருமான் திருக்கல்யாணம்.

ஜூன் 14,வைகாசி 31: பவுர்ணமி, பழநி முருகன் தங்கக்குதிரை வாகனம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பாற்குடம். திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் தேர், குரங்கணி முத்து மாலையம்மன் பவனி. அரியக்குடி சீனிவாசப்பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவப்பெருமாள் கோயில்களில் தேர். அவிநாசி சிவன்கோயிலில் பவுர்ணமி பூஜை.

ஜூன் 15,ஆனி1: ஷடசீதி புண்ணிய காலம். சோழவந்தான் ெஜனகை மாரியம்மன் பூக்குழி விழா, பட்டீஸ்வரம், சத்திமுற்றம் கோயில்களில் முத்துப்பந்தல், சவுரிராஜப்பெருமாள் சப்தாவர்ணம்.

ஜூன்16, ஆனி 2: மதுரை கூடலழகர் கருட வாகனம். திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விடையாற்று உற்ஸவம், சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X