* சனிபகவானால் பாதிக்கப்பட்டவர்கள் செருப்பை தானமாக வழங்குவது நல்லது.
* காலை - மாலை வரை ஜன்னலை திறந்து வையுங்கள். வீட்டில் சூரிய ஒளி, காற்று, அதிர்ஷ்டம் வரட்டும்.
* விரதம் இருக்கும் நாளில் சூரிய உதயத்திற்கு முன்பு (காலை 6:00 மணிக்கு) பல் துலக்குங்கள்.
* கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்.
* மழை காலத்தில் குடையை தானம் செய்வது சிறப்பானது.
* பெற்றோர் வறுமையில் இருக்கும்போது, பிறருக்கு தானம் செய்வது பாவம்.
* கனிவான சொல்லும், மன்னித்து விடுவதும் ஒருவர் செய்யும் தானத்தை விட சிறந்தது.
* செவ்வாய், சனி ஆகியவை நோய்களை உண்டாக்கும் கிரகங்கள் என்பதால், அந்நாளில் வைத்தியம் செய்ய ஆரம்பிக்காதீர்கள்.
* சிறிய விஷயங்களுக்கு எல்லாம் சத்தியம் செய்யக்கூடாது.
* ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்வோருக்கு, சொர்க்கத்தில் இடம் உண்டு.
* மூத்த மகன் அல்லது மகள் திருமணத்தை ஆனி மாதத்தில் நடத்தக்கூடாது.