நமது வாழ்க்கையின் ஆதாரமாக உள்ளது அன்பு. பலரும் இதற்காகத்தான் ஏங்குகிறோம். ஆனால் சிலர் அதை உணராமல், பணம், பதவியைத் தேடி அலைகிறார்கள். ஆரம்பத்தில் இவை நன்மை அளித்தாலும், முடிவில் ஏமாற்றத்தைதான் தரும். சரி இதற்கு தீர்வுதான் என்ன என்று யோசிக்கிறீர்களா... அன்பின் பாதையில் வாழ்க்கை நடத்துங்கள். அதாவது பிறருக்கு உதவுங்கள். உயிர்கள் மீது இரக்கம் காட்டுங்கள். பசித்தவருக்கு உணவளியுங்கள். அப்போது திருப்தி ஏற்படும்.