மலை, கடல், ஆறு என எல்லாம் படைத்த ஆண்டவர் உயிர்களையும் படைத்தார். மனிதர்களாகிய நாம் குத்தகைக்கு வந்திருப்பவர்கள். ஆனால் பொறுப்பு இல்லாமல் உலகை பாழ்படுத்துகிறோம். இப்படி இயற்கையை தொடர்ந்து அவமதித்தால் நிச்சயம் ஒருநாள் அழிக்கப்படுவோம். அப்போது ஆண்டவரால் வேறொரு சந்ததிக்கு இந்த பூமி கொடுக்கப்படும். எனவே இனியாவது உலகை நேசிப்போம். இயற்கை வளத்தை காப்போம்.