* சகிப்புத்தன்மையுடன் இருந்தால் சந்தோஷமாக வாழலாம்.
* சச்சரவில் இருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மையளிக்கும்.
* உண்மையாக இருந்தால் சுதந்திரமாக வாழலாம்.
* ஒவ்வொருவனும் தன் பாரத்தை தானே சுமப்பான்.
* சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள்.
* வஞ்சக மனத்தினர் சத்தியத்தை இழிவு செய்கிறார்கள்.
* நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால் வயதான பிறகும் வழியில் விலகாமல் இருப்பான்.
* வாழ்நாள் முழுவதும் நீதியைக் கடைபிடியுங்கள்.
* நல்ல மரங்கள் நல்ல கனிகளை தரும். நல்ல மனிதர்கள் நல்லதையே செய்வர்.
* முட்டாளின் கோபம் விரைவில் வெளிப்பட்டுவிடும். கோபத்தை அடக்குபவனே மனிதன்.
- பொன்மொழிகள்