* கோபம் என்ற தீயகுணம் வேண்டாமே.
* புலன்களின் கவர்ச்சி அறிஞர்களை கூட தடுமாறச் செய்து விடுகிறது.
* வேததர்மத்தில் நம்பிக்கை வை. அனைத்தும் நலமாகும்.
* நல்ல வழியில் செல்வத்தை தேடு. அதை நல்ல செயல்களுக்கு பயன்படுத்து.
* பிறர் செய்யும் தவறுகளை மன்னிப்பவன் மனிதனாகிறான்.
* பிறரது குறைகளை மறப்பவன் தெய்வமாகிறான்.
* பேராசை உனது வாழ்வையே திசை திருப்பிவிடும். கவனமாக இரு.
* நல்ல எண்ணமுடன் இரு. அதுவே உன்னை நல்ல இடத்திற்கு அழைத்து செல்லும்.
* புத்தியால் மனதை அடக்கு. வெற்றி இலக்கை எட்டுவது உறுதி.
* தர்மம் உள்ள இடத்தில் கடவுளும், அவர் உள்ள இடத்தில் வெற்றியும் இருக்கும்.
* வாழ்க்கை என்னும் கடலை கடக்க, தர்மம் ஓடமாக இருந்து உதவி செய்யும்.
சாந்தப்படுத்துகிறார் வியாசர்