* பணத்தை விட உண்மையான செல்வம் கல்வியே.
* வாரிசுகள் ஒற்றுமையாக வாழ்வதே, பரம்பரையின் வளர்ச்சிக்கு அழகானது.
* உணவுக்காக காத்திருக்கும் கொக்கு போல, நல்ல வாய்ப்புக்காக காத்திரு.
* கொடுத்த வாக்கை காப்பாற்றுவதே, படித்தவனுக்கான அடையாளம்.
* கோபத்தை கட்டுப்படுத்து. நல்ல மனதுடன் இருப்பாய்.
* துன்பம் அடுக்கடுக்காக வந்தாலும், நம்பிக்கையுடன் செயல்படு.
* சூரியன் உதிப்பதற்கு (காலை 6:00 மணிக்கு) முன்பே எழுந்துவிடு. உன் வாழ்க்கை பிரகாசிக்கும்.
* தாய், தந்தையே கண்கண்ட தெய்வம். அவர்கள் மீது அன்பு காட்டு.
* வீட்டில் இருந்து வழிபடுவதைவிட, கோயிலுக்கு செல்வது சிறப்பு.
* பெற்றோர், மனைவி, குழந்தை என குடும்பத்துடன் வாழு.
* அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் நட்பாக இரு.
* சிக்கனமாக இருந்து பொருளைத்தேடு. வாழ்க்கையில் முன்னேறு.
சொல்கிறார் அவ்வையார்